இட ஒதுக்கீட்டில் தங்கள் சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு பண்டாரகுல முன்னேற்ற நல அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பண்டாரகுல சமூகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், தற்போது முன்னேறி வந்து கொண்டிருக்கும் தங்கள் சமூகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த உள் ஒதுக்கீடு என்பது எதிர்காலத்தில் கல்வி, அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பண்டாரகுளம் மக்களுக்கு இந்த 2.5 சதவீத இட ஒதுக்கீடு சரியான விகிதாச்சார அடிப்படையில் இல்லை என்பதாலும் இந்த அறிவிப்பை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கொடுக்கப்பட்ட மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பண்டாரகுல முன்னேற்ற அறக்கட்டளையின் மாநிலத் தலைவர் பழனிச்சாமி, மாநில பொதுச்செயலாளர் நடேசன் மாநில பொருளாளர் ஐயப்பன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Be First to Comment