தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பிற்கு இந்து மக்கள் கட்சி கண்டனத்தை தெரிவிக்கிறது! இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது.
தமிழகத்தின் இப்போதைய தேவை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு! இந்தியாவிலேயே கொரானா நோய்த்தொற்று தமிழகத்தில் மிக அதிகமாக இருக்கிறது.
கொரானா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவத் துவங்கிய போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு 15 நாட்கள் இருந்தது. அதன் மூலம் எந்தப் பயனுமில்லை. 25% கொரான நோய்தொற்று வேகமெடுத்தது.
இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு போதிய பலனை இன்னும் தரவில்லை. இந்நிலையில் நோய் பரவும் சங்கிலியை அறுப்பதற்கு முழு ஊரடங்கு உத்தரவு என்பது தான் சரியானதாக இருக்கும். ஆனால் மீண்டும் தளங்களுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு என அறிவித்திருக்கிறார்.
இது நிர்வாக சீர்கேட்டின் உதாரணமாகும். துக்ளக் தர்பாரின் அடையாளமாகும். மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு மாத காலத்திற்கு முழு ஊரடங்கு அமுல்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் நோய் தொற்றுகளில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற முடியும்.
1650க்கு கீழ் தொற்று பாதிப்பு வந்த பிறகும் ஊரடங்கை நீட்டித்த தலைநகர் டெல்லி!
20000க்கு கீழ் தொற்று பாதிப்பு வந்த பிறகும் பெரிய தளர்வுகளை அறிவிக்காத கேரளம்!
18650க்கு கீழ் தொற்று பாதிப்பு வந்த பிறகும் கடும் ஊரடங்கை நீட்டித்துள்ள கர்நாடகம்!
22000க்கு மேல் நோய் பாதிப்புள்ள தமிழகத்தில் ஏகப்பட்ட தளர்வுகளோடு ஊரடங்கு நீட்டிப்பு என அறிவித்துள்ள பஞ்சாயத்து அரசு!
நோய் பாதிப்புகள் அதிகமாக உள்ள 11மாவட்டங்களுக்கும் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லை!
சலூன் கடை/தியேட்டர்/கோயில் தவிர எல்லாம் திறக்கப்போறிங்க நாளை மறுநாளிலிருந்து!
தமிழகத்தில் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது என சொல்வதே சரி! தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உடனடியாக அமுல் படுத்தி கொரானா நோய் பரவல் சங்கிலியை அறுத்து எரியும்படி தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைப்பதாக அவர் தெரிவித்தார்.
Be First to Comment