ஊரடங்கு : பிரதான சாலைகள் வெறிச்சோடின. நியாயவிலைக் கடைகளில் நிவாரணத் தொகை தடையின்றி வழங்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவை மாவட்டத்தில் 6வது ஞாயிற்றுக்கிழமையாக இன்று தளர்வுகளற்ற கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாநகர் பகுதியில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் 100 அடி சாலை உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறன. பால் மற்றும் மருத்துவ சேவை தவிர்த்து மளிகை, காய்கறி கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. மாநகரில் உள்ள ஏடிஎம் மையங்கள் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. போலீசார் 50 இடங்களில் தடுப்புகள் வைத்து சோதனை மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றும் நபர்கள் மீது அபராதம் விதிக்கும் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். கோவையில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 2600 வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டாலும் நியாயவிலைக் கடைகளில் நிவாரணத் தொகை தடையின்றி வழங்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கோவையில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று 2000 ரூபாய் நிவாரணத் தொகையை பெற்று செல்கின்றனர். புயல் காரணமாக கோவை மாநகரப் பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் குடை பிடித்தவாறு வரிசையில் நின்று 2000 ரூபாய் நிவாரணத் தொகையை பெற்று சென்றனர்.

Be First to Comment