கோயமுத்தூர் ஜி.என்.மில்ஸ் வைலட் கார்டன் பகுதியில் உள்ள யமுனா வீதியில் குடும்பத்தோட குடியிருந்து வருகிறார் சுரேந்தர். இந்த நிலையில நேற்று இரவு 11 மணி அளவில் அவர் வீட்டில் வளர்த்து வரும் 12 வயதுடைய பொமரேரியன் நாய் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.
நீண்ட நேரமா நாய் குரைத்துக் கொண்டே இருந்ததைக் கண்டு சுரேந்தரின் தாயார் கதவை திறந்து வெளிய வந்து பார்த்துள்ளார். அப்போது காலுக்கு அடியில் 4 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று கடந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு அடியில் சென்றுள்ளது.
அதனை பார்த்து மீண்டும் அந்த நாய் குரைத்துக் கொண்டே காரின் அடியில் இருந்த பாம்பின் வாலை பிடித்து இழுத்துள்ளது அப்போது திடீர்னு அந்த பாம்பு திரும்பி நாயின் கண் மற்றும் காதில் கொத்தியுள்ளது.
இtஹில் வலியால துடித்த நாய் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தது. இதைக் கண்டு அச்சமடைந்த சுரேந்தர் உடனடியாக ஸ்நேக் ரெஸ்க்யூ குழுவினர்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சுமார் 12 மணியளவில் அங்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர் அவர்கள் வீட்டின் மாடிப் படிக்குக்குள் புகுந்திருந்த பாம்பை ஒரு டப்பா மூலம் பிடித்து அதனை வனப்பகுதிக்குள் கொண்டு சென்றூ விட எடுத்துச் சென்றார்,
பிடிபட்ட பாம்பு 4 அடி நீளம் இருந்த கண்ணாடி வீரியன் வகைய சேர்ந்தது என்றும், இது அதிக விசம் கொண்ட பாம்பு என்றும் தெரியவந்துள்ளது.
அதிர்ஷ்டவசமா வீட்டில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்றபோதும் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் அவர்களின் நாய் பாம் கொத்தி இறந்தது அவர்களில் வீட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஜமானரை காப்பாற்ற தனது உயிரை விட்ட நன்றியுள்ள நாய்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment