மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் கோவை சித்தாபுதூரில் இருந்து நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சி ஊழியர்களுடன் வாக்கு சேகரிப்பு பயணத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ”சென்னையில் வசித்து வரும் வானதி அவர்கள் கடந்தமுறை மயிலாப்பூரில் போட்டியிட்டார் இப்போது இங்கே போட்டியிடுகிறார். தேர்தல் முடிந்தவுடன் சென்னைக்கு பறந்துவிடுவார். அதேபோல கமல் அவர்கள் சினிமாவில் நடிப்பதற்கும், பிக்பாஸிற்கும் சென்னையில் மட்டுமே இருப்பார். இந்தியன்2 சூட்டிங் ஆரம்மிக்கவில்லை அந்த படத்திற்கு மேக்கப் போட 4 மணி நேரம் கலைக்க 4 மணி நேரம் என 8 மணி நேரம் மேக்கப்பிலேயே நேரம் போய்விடும்.
இப்படியானவர்கள் நமது தொகுதியை பற்றி சிந்திக்கவே நேரம் இருக்காது. ஆனால் நான் இந்த மண்ணின் மைந்தன். யார் எந்த நேரம் அழைத்தாலும் ஓடோடி வருகிறவன் கூப்பிடும் தூரத்தில் என் வீடு உள்ளது. இங்கே பகிங்கரமாக திறந்த வெளியில் எனது செல்போன் எண் 9994897711 என அறிவிக்கிறேன். இதுபோன்று இவர்களால் அறிவிக்க முடியுமா. தொகுதி மக்களின் நல்லது கெட்டது என எதிலும் பங்கேற்காதவர்கள் தேர்தலுக்கு மட்டும் வாக்கு கேட்டு வருகிற இவர்களை புறக்கணிப்போம். மக்களை பிளவு படுத்தி கலவரம் ஏற்படுத்தும் பாசிச மதவெறி பிடித்த பாஜகவை விரட்டி அடிப்போம். மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம்.திமுக தலைமையில் நல்ஆட்சி தமிழகத்தில் அமைய இருக்கிறது. நல்ல பல திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இதோடு கோவை மக்களின் நலனுக்கான பணிகளை மேற்கொள்ள கை சின்னத்தில் வாக்களியுங்கள் என மயூரா ஜெயக்குமார் உரையாற்றினார்.
மயூரா ஜெயக்குமாருடன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திமுக பொதுக்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, பகுதி கழக செயலாளர் சேதுராமன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர், விசிக மண்டல செயலாளர் சுசி.கலையரசன். மதிமுக லூயிஸ் உள்ளிட்ட தலைவர்கள் உடன் வாக்கு சேகரித்தனர்.
Be First to Comment