கோவை தங்கம் மற்றும் மருமகன் அருண் பிரகாஷ் அவருடைய மனைவி உட்பட 3 பேர் மீது கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிந்துஜா என்கிற பெண் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் மனு ஒன்றைக் கொடுத்துவிட்டு பரபரப்பாக பேட்டி அளித்திருந்தார்.
அதில் கோவை தங்கம் அவர் மருமகன், மகள், எங்களை கொலை மிரட்டல் விடுவதாக கூறி இருந்தார். இதைத் தொடர்ந்து இன்று கோவை ஆடீஸ் வீதியில் உள்ள பத்திரிகையாளர் கூட்டரங்கில் கோவை தங்கம் வழக்கறிஞருடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் சிந்துஜா என்கிற பெண் ஒருவர் என் மீது கொலை மிரட்டல் விடுவதாக டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த சிந்துஜா என்கிற பெண் எனக்கு யார் என்றே தெரியாது. அவர் முகத்தை பார்த்ததே கிடையாது. செல்போனில் பேசியதே கிடையாது. அவர்கள் உறவினர் யார் என்றே தெரியாது.

முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காழ்ப்புணர்ச்சி உடன் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். யார் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அந்தப்பெண்ணை தூண்டிவிட்டு இருக்கிறார்களோ அவர்கள் மீது கோவை கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆதலால் அந்தப் பெண் கூறியதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் அரசியலில் மிகவும் தூய்மையாக இருந்து வரக்கூடியவன். எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வெத்தலை, பாக்கு, புகையிலை, போடுவது, தண்ணீர் அடிப்பது, மாமிசம் சாப்பிடுவது, என எந்த பழக்கமும் கிடையாது. இதுவரை நான் யாருக்கும் துரோகம் செய்தது கிடையாது. அப்படி இருக்கும் பொழுது என்னுடைய பெயரை அந்தப்பெண் குறிப்பிட்டது என்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. உங்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்பதற்காக இந்த செய்தியாளர் சந்திப்பு என தெரிவித்தார்.

நான் அந்தப் பெண் வீட்டிற்கு சென்றிருந்தால். சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்க்கச் சொல்லவும், அந்தப் பெண்ணுக்கு தொலைபேசியில் பேசி இருந்தால் செல்போன் ரிக்கார்டரை எடுத்து பார்க்கச் சொல்லவும், அந்தப் பெண் புகார் தெரிவித்துள்ளார் என்ற உடனேயே நான் நேரடியாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் துணை ஆணையரிடம் சென்று இது குறித்து மனு அளித்துள்ளேன்.
அந்தப் பெண்மணி பின்னால் இருந்து தூண்டி விடக்கூடிய அவர்கள் மீது கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளேன் என தெரிவித்தார். என்னுடைய மருமகனும் அந்தப் பெண்ணும் இணைந்து ஏதோ ஒரு தொழில் செய்து உள்ளனர். அதற்கு அவர்கள் இருவரும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டுக்கொண்டு உள்ளன. இந்த நிலையில் அவர்களுக்குள் உள்ள கொடுக்கல் வாங்கல் பிரச்சனை. அதற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது.
கோவை புலியகுளம் காவல் நிலையத்தில் உங்கள் மருமகன் உட்பட மூன்று பேர் மீது ரத்தக் காயங்களை ஏற்படுத்துதல். கொலை மிரட்டல் உட்பட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு ? யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் கிடையாது. யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கூறிக் கொள்கிறேன். நான் அரசியலும் சரி பொது வாழ்க்கையிலும் சரி நான் மிகவும் தூய்மையானவன் என மீண்டும் மீண்டும் கூறிக் கொள்கிறேன் என இவ்வாறு கோவை தங்கம் கூறினார்.
Be First to Comment