தமிழக சட்டப்பேரவையில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
‘இந்த நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படுவதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. எந்தெந்த தேதிகளில் எந்த மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பது என்பது தொடர்பாக முடிவெடுக்க நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டனர்.
அதில், தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை ஏப்ரல் 6ஆம் தேதி முதல் மே மாதம் 10ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. “ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2 மணி வரை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். கேள்வி நேரம் நேரலையில் ஒளிப்பரப்படும். அதேபோல், சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் முதல்வர் ஏதேனும் அறிவிப்புகள் வெளியிட்டால் அதுவும் நேரலையில் ஒளிபரப்பப்படும்”

துறை ரீதியான மானிய கோரிக்கைகள்
ஏப்ரல் 6-நீர்வளத்துறை
ஏப்ரல் 7- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,
ஏப்ரல் 8- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
ஏப்ரல் 9 10 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை.
ஏப்ரல் 11 -உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை,
ஏப்ரல் 12 -நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை
ஏப்ரல் 13- வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை.
ஏப்ரல் 14 -தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 15- புனித வெள்ளியை முன்னிட்டு அரசு விடுமுறை.
ஏப்ரல் 16 ,17 தேதிகளில் சனி ஞாயிறு காரணமாக அரசு விடுமுறை.
ஏப்ரல் 18- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு.
ஏப்ரல் 19- நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் வளர்ச்சி (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை)
ஏப்ரல் 20 -வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை.
ஏப்ரல் 21- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை.
ஏப்ரல் 22-பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை.
ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை.
ஏப்ரல் 25- வனம் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை) , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை.
ஏப்ரல் 26-எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை
ஏப்ரல் 27- தொழில்துறை, தமிழக வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
ஏப்ரல் 28- கைத்தறி மற்றும் துணிநூல் துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, முத்திரைகள் மற்றும் பத்திரப்பதிவு (வணிகவரி மற்றும் பதிவுத்துறை)
ஏப்ரல் 29- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை.
ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை.
மே 2ஆம் தேதி திங்கட்கிழமை சட்டப்பேரவை கூட்டம் இல்லை.
மே 3ஆம் தேதி ரம்ஜான் விடுமுறை..
மே 4- இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்-நிர்வாகம் (உள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை), போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை.
மே 5- இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு.
மே 6-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.
மே 7- காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை.
மே 8 அரசு விடுமுறை.
மே 9- தொடர்ச்சியாக காவல் , தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, நிதித்துறை, மனித வள மேலாண்மை துறை
மே 10- பொதுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை.
1-மாநில சட்டமன்றம்
2-ஆளுநர் மற்றும் அமைச்சரவை அரசினர் சட்ட முன் வடிவுகள்-ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதலும்.
Be First to Comment