கோவை ஒண்டிப்புதூரில் ”மிலிட்டரி கார் இன் ஆவின் பாலகம்” பிரபலம் பகல் இரவு என எந்த நேரத்திலும் நியாயமான விலைக்கு பால் கிடைக்கும். பல அமைப்புகளால் பாராட்டப்பட்ட கோபாலகிருஷ்ணனை சந்தித்தோம்
கோவை ஒண்டிப்புதூரில் கவனம் ஈர்க்கிறது கோவை ஆவின் பார்லா் ஏசி வசதி சுமார் 150 வகை பால் பொருட்கள் குறைந்த விலையில் என மற்றவற்றில் இருந்து மாறுபட்டு இந்த பாலகம் தற்போது கோவையில் முதலாவது 24 மணி நேரம் பாலகமாக செயல்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒண்டிப்புதூரில் கோவை ஆவின் பால் என்ற பாலகம் செயல்படுகிறது. மற்ற பாலகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு விற்பனையகம் ஆக இது நடைபெற்று வருகிறது மாவட்டத்திலேயே சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு தற்போது முதலாவது முழு நேரமாக இயக்கப்பட உள்ளது.
ஆவின் பாலகத்தில் இயக்கி வரும் முன்னாள் ராணுவ வீரர் ஆர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ”35 ஆண்டுகள் நாட்டுக்கு பணி செய்து விட்டேன் இனி மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்ற போது தான் இப்பகுதியில் தரமான பால் பால் பொருட்கள் கிடைப்பதில்லை என தெரிந்து கொண்டேன். பால் பொருட்கள் வேண்டும் மென்றால் கோவையின் நகரப்பகுதி செல்ல வேண்டும். இதனால் இப்பகுதி மக்கள் சிரமம் படுகிறறா்கள் நான் ஆவின் நிர்வாகத்தில் தெரிவித்து பாலகம் அமைப்போம் மற்ற பாலகம் போல இல்லாமல் குளிரூட்டப்பட்ட விற்பனையகமாக அறிமுகப்படுத்தினோம்.
பாலகத்துக்கு கொடுக்கப்படும் விலையிலேயே மக்களுக்கு விற்பனை செய்கிறோம். தரம் விலை நியாயமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. தினமும் காலை 4;30 மணி முதல் இரவு 10 மணி வரை விடுமுறை இல்லாமல் பாலகம் செயல்பட்டது. மக்களின் தேவையை கருதி முதல் முறையாக 4 ஆண்டுகளுக்கு முன்பு முழு நேரமாக செயல்பட 24 மணிநேரமும் இயங்க பால் பொருட்களை வாங்க முடியும்” என்றார்.
ஹோட்டலில் சர்வராக பணியாற்றினார் பிறகு 34 ஆண்டுகள் ராணுவ பணி இப்போது 365 நாளும் 24 மணி நேரமும் ஆவின் பால் விற்றுக் கொண்டிருக்கிறார் கோவை ஒண்டிப்புதூரில் கோபாலகிருஷ்ணன்.

ஒண்டிபுதூரில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஆவின் பாலகம் அசத்தும் முன்னாள் ராணுவ அதிகாரி
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment