ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுகவின் இளைஞரணி, மாணவரணி, மகளிரணியினர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்று வருகிறது.
இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம், மாணவரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம், மகளிரணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நவ இந்தியா அருகில், எஸ்.என்.ஆர்.கல்லூரி சாலையில் உள்ள, பீளமேடு அக்சயம் ஹோட்டல் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் பகுதிக்கழக, நகரக் கழக,ஒன்றியக்கழக,பேரூர்க்கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் கோவை வருகை தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. “23ம் தேதி கோவை வரும் தமிழக முதல்வர் ஒரே மேடையில் 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.”
“வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 க்கு 39 வெற்றி பெறுவோம். அதில் கோவை – பொள்ளாச்சி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற நிலையை உருவாக்குவோம்.” என அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு.
Be First to Comment