கோவையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்களை கோவை உக்கடம் போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் குட்கா பொருட்கள் கடத்தியதாக மூன்றுபேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா போதை ஊசிகள் போதை மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூடிய சூழ்நிலையில் தற்போது கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் மர்ம நபர்கள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்குவதற்காக நான்கு சக்கர சரக்கு வாகனத்தில் கடத்துவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து கோவை உக்கடம் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தியதில் சுமார் ஒரு டன் எடையுள்ள குட்கா பொருட்களை கடத்தி வந்த சரக்கு வாகனத்தையும், உ டன் எடையுள்ள குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்து குட்கா பொருட்களை கடத்தி வந்ததாக கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆஷிக், மொய்தீன், தேவேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்து யாருக்காக எங்கிருந்து இந்த தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது என்றும் மேலும் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெற்றோர்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
Be First to Comment