நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் ஊர்வசி, சத்தியராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘வீட்ல விஷேசம்’ திரைப்படம். இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கோவை புரூக் பீல்டு மாலில் இத்திரைப்படம் திரையிடப்படுள்ளது. இந்நிலையில் புரூக் பீல்டு மாலில் இத்திரைப்படத்தினை பார்த்த பொதுமக்களை படத்தின் கதாநாயகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி, மற்றுமொரு இயக்குனரான சரவணன் ஆகியோர் சந்தித்து படம் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் அதில் தெலுங்குபாளையத்தை சேர்ந்த அமுதா என்பவர் நாட்டமை படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு தான் வந்துள்ளதாக தெரிவித்தார். அதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த அவர், அவரை செய்தியாளர் சந்திப்பிற்கு அழைத்து வந்து அருகில் அமரவைத்து கொண்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆர்.ஜே.பாலாஜி “நான் கோவையில் தான் ஆர்ஜே வேலையை துவங்கியதாக மகிழ்ச்சியுடம் தெரிவித்தார். 300 கொலைகள், 500 கத்திகுத்துகள் அவ்வாறெல்லாம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கின்ற சாத்வீகமான படம் “என தெரிவித்தார்.

மேலும் பல்வேறு மக்கள் ஹிந்து படத்தை காட்டிலும் மிக நன்றாக உள்ளதாக தெரிவித்தாகவும் கூறினார். பின்னர் பொதுமக்களுடம் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
Be First to Comment