இந்த வருடம் ஓணம் பண்டிகையில் காய்கறிகள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை ஆகவில்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள், பூக்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.. ஆனால் கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கேரள எல்லையோரத்தில் உள்ள கோவையில் இருந்து அத்தியாவசியப் பொருள்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது.
Be First to Comment