உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள், இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை முன்னிட்டு, அத்தப்பூ கோலமிட்டு கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரித்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாடும் மக்கள் அதிகாலை முதலே தங்களது குடும்பத்தினருடன் ஆலயம் வந்து சிறப்பு தரிசனம் மேற்கொள்ள வருகிறார்கள். நான் என்ற அகம்பாவத்தை ஒழித்து நாம் என்ற ஒற்றுமையை வலியுறுத்துவதாக, ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
Be First to Comment