கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் முன்பு 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
78 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலை படி உயர்வை வழங்க வேண்டும், அரசு ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களை இணைக்க வேண்டும், 1998 பின் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய உயர்வை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் முன்பு மத்திய மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இக்குழுவின் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாவட்ட செயலாளர் அரங்கநாதன், செயலாளர்கள் ஞானபிரகாசம், சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம், பி.எஸ்.என்.எல் டாட் ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கம், போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.
Be First to Comment