கச்சா பாதம் பாடலைத் தொடர்ந்து சோடா வியாபாரி பாடும் ‘ஜிங்கில்’ பாடல்
லெமன் சோடா தயாரிக்கும் நபர் ஒருவரின் பாடல் தற்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. கடலை வியாபாரி பாடிய ‘கச்சா பாதம்’ பாடல் நாடு முழுவதும் வைரலானது. பாடலோடு சேர்ந்தே அப்பாடலைப் பாடிய பூபன் பத்யாகரும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து அந்த வரிசையில் எலுமிச்சை சோடா வியாபாரி வியாபாரத்தின் போது பாடும் ‘ஜிங்கில்’ பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கவுரவ் சாகர் என்பவர் பகிர்ந்து உள்ள இந்த வீடியோவில் லெமன் சோடா தயாரிக்கும் நபர் தனக்கே உரித்தான தாளத்தில் பாடுகிறார் அதில், சோடாவில் தான் என்னென்ன பொருட்களை சேர்க்கிறேன் என்றும் அனல் மிகுந்த வெயில் காலங்களில் எலுமிச்சம்பழ பானம் நம்முடைய உடலுக்கு அளிக்கும் நன்மைகள் குறித்தும் மெட்டெடுத்து பாடுகிறார்.
இவரது இந்த வித்தியாசமான பாடலை கேட்க எப்போதும் மக்கள் கூட்டம் இந்த கடையில் அலைமோதுகிறது.
Link 👇👇👇👇👇👇
https://www.instagram.com/reel/CbhZZymN8w_/?utm_source=ig_web_button_share_sheet
Be First to Comment