கோவை புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியநாயக்கன்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் நேற்று மத்தம்பாளையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஜோடியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் மத்தம்பாளையம் கிளாசிக் கார்டன் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் அருண்பரசாத் (29) மற்றும் பெரியநாயக்கன்பாளையம் விஷ்ணு நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் ஷாலினி (21) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
Be First to Comment