கோவை பூ மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், நிலக்கோட்டை, ஒசூா் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கோவையில் கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்களில் பொது மக்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து கோவையில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை குறைந்திருந்தது.
கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருவதையொட்டி,கோவையிலிருந்து கேரளாவிற்கு அதிக அளவில் பூக்கள் அனுப்பப்படுகின்றன. இதனால் பூக்களின் தேவையும், விற்பனையும் அதிகரித்து, விலையும் உயா்ந்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது
by
Tags:
Leave a Reply