கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் தி.மு.க சார்பில் கட்சி அலுவலக திறப்புவிழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் கலந்துகொண்டு திறந்து வைப்பதாக இருந்தது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த அருந்ததியினர் சமுதாயத்தை சேர்ந்த கட்சி நிர்வகிகளுக்கு கட்சி அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு எவ்விதமான அழைப்பும் தரப்படவில்லை. மேலும் தொடர்ந்து இதுபோன்ற கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக அருந்ததியின நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அக்கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகள் புறக்கணித்து வந்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த தொண்டர்கள் தி.மு.க பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரை முற்றுகையிட முடிவு செய்திருந்த நிலையில் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
அதனைத் தொடர்ந்து உள்ளூர் நிர்வாகிகள் இல்லாமல்,அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதனால் அப்பகுதி அருந்ததியின தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்து கலந்து சென்றனர். இதனால் கட்சியினர் கலைந்து செல்பவர்களை சமாதானப்படுத்தி நிகழ்ச்சியில் அமர கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் இவ்வாறாக கட்சியில் அருந்ததியின நிரவகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மலுமிச்சம்பட்டி தி.மு.கவினர் நம்மிடையே, ”மலுமிச்சம்பட்டி தி.மு.கவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. தேவையில்லாமல் சிலரின் தூண்டதலின் பேரில் விரும்பதகாத வகையில் சிலர் இதுபோன்ற பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். எந்தவித பாகுபாடு இல்லாமல் நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவதை கண்டு பொறுத்து கொள்ள முடியமல் சில விஷமிகளின் செயலே இது.” என்றனர்
Be First to Comment