கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உணர்திறன் சிகிச்சை பூங்காவை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் சிகிச்சை மையங்களை பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பொதுத் துறை அமைச்சர் பல்வேறு பெரிய பெரிய கட்டிட திறப்பு விழாவை காட்டிலும் இது போன்ற நிகழ்வுகள் தான் தங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதுபோன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
முன்னொரு காலத்தில் பணம் இருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் நடுத்தர மக்கள் மற்றும் பண வசதி குறைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும் நிலை என்பது இருந்ததாக தெரிவித்த அவர் அந்த நிலையை பத்து வருடங்களுக்கு முன்பு மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு அதனை மாற்றி கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைவரும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம் என்ற நிலையை கொண்டு வந்தார் என தெரிவித்தார்.
தற்பொழுதும் அதேபோன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயலாற்றி வருவதாகவும் தற்போது மக்கள் மருத்துவரை தேடி செல்லும் நிலை மாறி மருத்துவர்கள் மக்களைத் தேடிச் செல்லும் விதமாக மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உணர்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் திருக்குறள் வாசிப்பது போன்ற கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர் அவர்களுக்கு அமைச்சர் சான்றிதழ்களை வழங்கினார்.

கட்டிட திறப்பு விழாவை காட்டிலும் நிகழ்ச்சிகள் தான் மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சர் ஏ.வ.வேலு
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment