புற்றுநோய் போன்ற நோய்களுக்கு கதிரியக்க சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது.
தேசிய அளவில் கதிரியக்க சிறப்பு மருத்துவர்கள் இணைந்து ஐ.ஆர்.ஐ.ஏ.எனும் அமைப்பை உருவாக்கி இதில் ரக்ஷா எனும் சார்பு அமைப்பு வாயிலாக பெண் குழந்தைகள் மேம்பாட்டிற்கென பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை,ஈரோடு,திருப்பூர்,நீலகிரி,கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கதிரியக்க மருத்துவர்கள் சங்கத்தின் கொங்கு மண்டலம் சார்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு டிஜிட்டல் டேப்லெட் வழங்கும் நிகழ்ச்சி கோவை வரதராஜபுரம் தியாகி என்.ஜி.இராமசாமி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கதிரியக்க மருத்துவர்கள் சங்க கொங்கு மண்டல தலைவர் டாக்டர் தேவானந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் டாக்டர் செந்தில் குமார்,பொருளாளர் மற்றும் ரக்ஷா சமூக திட்டத்தின் கோவை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுபஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பி.எஸ்.ஜி. பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர். புவனேஸ்வரன், கதிரியக்க மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டு,பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் கல்வி கற்க உதவும் விதமாக டிஜிட்டல் டேப்லெட்டுகளை வழங்கினர்.
கொரோனா அரசு விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,தியாகி என்.ஜி.ராமசாமி பள்ளியின் தலைமையாசிரியர் சதாசிவன் மற்றும் கதிரியக்க சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் ,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment