மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு இன்று நடக்கிறது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் செயல்பாடு, கூட்டணி, தேர்தலை எதிர்கொள்வது, முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்படும் எனத் தெரிகிறது.இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்த நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் அந்தக் கட்சியின் முதல் பொதுக்குழு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி, தேர்தலை எதிர்க்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.மேலும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்தும் அறிவிக்கப்படும் எனவும், முதல்வர் வேட்பாளராக கமலை ஏற்பவர்களுடன் கூட்டணி என முடிவெடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

Be First to Comment