கரூர் மாவட்டத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கேலி செய்யும் விதமாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். அதில் “திருடர் குல திலகமே, ஊழலின் மறு உருவமே, அணிலுக்கு அடிச்ச ஜாக்பாட் 5,000 கோடிக்கு அதிபதியாக்கிய BGR ஊழல்” என்ற வாசகத்தை எழுதி தராசு தட்டில் ஒரு பக்கம் பணக்கட்டுகளும், மறுபக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமர்ந்திருப்பது போலும் அமைச்சர் செந்தில் பாலாஜி பணத்தை விட பலமானவர் என்பதை போல் தராசு தட்டு அமைச்சிருக்கும் பக்கத்தில் சாய்ந்திருப்பது போன்று சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர்.

இந்நிலையில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி, கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பாஜக வை மறைமுகமாக விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களில், “நோட்டா கிட்ட வச்சுக்கோ…. எங்க ஏட்டா கிட்ட வேண்டாம்…” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை ரயில் நிலையம், உப்பிலிபாளையம் மேம்பாலம், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
Be First to Comment