Press "Enter" to skip to content

கறிக்கடை உரிமையாளர் தீக்குளிக்கும் சி.சி.டி.வி காட்சி

கோவையில் கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் கறிக்கடை உரிமையாளரை தாக்கி அவரது வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்ற சம்பவத்தால் மனமுடைந்த கறிக்கடை உரிமையாளர் தீக்குளிக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கிணத்துக்கடவு பகுதியை அடுத்த செட்டிக்காபளையம் பகுதியைச் சேர்ந்த சேதுராமன் என்பவரது மகன் விஜயகுமார் (38). தாமரைக் குளம் பகுதியில் கறிக்கடை நடத்தி வரும் விஜயகுமார் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரிடம் கடனாக 20 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். பெறப்பட்ட கடனில் 11,000 ரூபாயை விஜயகுமார் செலுத்திய நிலையில் மீதம் உள்ள 9,000 ரூபாயை உடனடியாக செலுத்துமாறு ஜெயப்பிரகாஷ் நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தொடர்ந்து கடனை திருப்பி செலுத்துமாறு தொந்தரவு செய்து வந்த ஜெயக்குமார் நேற்று தாமரைக் குளம் பகுதியில் பொள்ளாச்சி சாலையில் நின்று கொண்டிருந்த விஜயகுமாரின் வாகனத்தை பறிமுதல் செய்ய முற்பட்டுள்ளார். அப்போது விஜயகுமார் தான் விரைவில் கடனை திருப்பி செலுத்தி விடுவதாகவும், வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டாம் எனவும் மன்றாடி உள்ளார். ஆனால் வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்ற ஜெயபிரகாஷ் விஜயகுமாரை தாக்கி வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றார்.
அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக வானத்தில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி கொண்ட விஜயகுமார் உள்ளே இருந்த தீப்பெட்டியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தீக்குளித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் விஜயகுமாரின் வாகனத்தை எடுத்துச்செல்ல முயல்வதுடன் அதனைத் தொடர்ந்து விஜயகுமார் வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks