தமிழ்நாட்டில் ஒரு முறை கூட தோல்வி அடையாத சட்டமன்ற உறுப்பினர் என்றால் அது திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிதான். அதுவும் தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

கருணாநிதி காலமானதற்கு பிறகு அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டார். அங்கு நாள்தோறும் அவரது நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, முரசொலி நாளிதழ் அங்கு வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் 2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தமிழக சட்டசபையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. அந்த வகையில் இன்று ஹிந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இதன் காரணமாக கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்ற மாதிரியை வடிவமைத்து அலங்கரித்துள்ளனர். கடவுள் மறுப்பு கொள்கையுடன் இருந்த கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்று வடிவமைக்கப்பட்டது தற்போது சமூக தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Be First to Comment