தி.மு.க-வில் 15-வது உட்கட்சிப் பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை பேரூர், ஒன்றியம், நகரம், மாநகரம், பகுதி, வட்டம், மாவட்டம் ஆகியப் பதவிகளுக்கானத் தேர்தல் நடந்து முடிந்து, கிளைமாக்ஸை எட்டியிருக்கிறது தேர்தல். தி.மு.க தலைவர் பதவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியிடுவதற்கு கரூர் மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொ.அ .ரவி போட்டியிடுவதற்கு முன்மொழிந்து , வழிமொழிந்து தி.மு.க தலைமைக் கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் , மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் மாரி செல்வம் , தலைமை செயற்குழு உறுப்பினர் வெ.பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன், தொண்டாமுத்தூர் தியாகு மற்றும் நிர்வாகிகள். இது போல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தி.மு.க தலைவர் பதவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி ஆர் பாலு ஆகியோர் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்து வருகின்றனர். மனுக்கள் குவிந்து வருவதால் தி.மு.க தலைமை அலுவலகமான அறிவாலயம் களைகட்ட துவங்கியுள்ளது.
Be First to Comment