கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை முதல்வர் கவச உடை அணிந்து கேட்டறிந்தார்..
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இம்மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இன்று காலை ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வுகளை முடித்துவிட்டு கோவை வந்தடைந்த முதல்வர், சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.


கொரோனா பாதிக்கப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் தொடர்பாக முதல்வர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து,கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஆய்வு மேற்கொண்ட அவர் பாதுகாப்பு உடை அணிந்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார்.
Be First to Comment