தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் கவர்னராக உள்ளார். மற்றொரு மூத்த தலைவர் இல. கணேசன், மணிப்பூர் கவர்னராக உள்ளார். தெலுங்கானாவில் அந்த மாநில அரசிற்கும் தமிழிசை சவுந்திரராஜனுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழிசையை தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தமிழக பாஜக மூத்த தலைவராக உள்ள எச்.ராஜா மற்றும் பொன்.ராதாகிருஷ்ணனை ஆளுநர் பொறுப்பில் நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மத்திய அரசு இருவருடன் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநில ஆளுநராக உள்ள ஆரிப் முகமது கான் மாற்றப்பட்டு எச்.ராஜா கேரள மாநில ஆளுநராக நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் எச்.ராஜாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Be First to Comment