முன்னான் மத்திய நிதியமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்,நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் அவர்களின் 77 வது பிறந்தநாளையொட்டி, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஹரிஹரசுதன் தலைமையில் கோவையில் சிறப்பு பூஜைகள்,வழிபாடு,அன்னதானம்,என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். எம்.என்.கந்தசாமி , ஐ.என்.டி.யூ.சி . பொதுச்செயலாளர் கோவை செல்வன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்,,முன்னதாக பீளமேடு ஸ்ரிங்கார் நகர், சீரடி துவாரகமாகி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து, உக்கடம் ஜி.எம்.நகரில் உள்ள டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.பின்னர்,ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது.தொடர்ந்து, மதியம் திருச்சி ரோட்டில் உள்ள ஜங்கிள் பீர் அவுலியா தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.தொடர்ந்து,மாலை காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் சௌந்தர குமார், பேரூர் திருமூர்த்தி, சோபனா செல்வன், கருணாகரன், ஜெரி லூயிஸ், தென்றல் நாகராஜ், intuc ராகவன்,intuc மதியழகன், வடவள்ளி பாலு, பார்த்திபன், கருடா பாலு, காமராஜ், வீரா ராம்குமார், குணசேகர், லக்ஷ்மண சாமி, டென்னிஸ் செல்வராஜ், காந்தி, தவுலத் கான், இமயம் ரஹ்மத்துல்லா , ஜோதி முத்துக்குமார், ஜமாலுதீன், தனபால், சிரில், மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…
Be First to Comment