கோவையில் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்ட வேண்டுமென சில இஸ்லாமிய அமைப்புகள் முயற்சிக்கின்றனர் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.
கோவையில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த சில இஸ்லாமியர்கள் முயற்சிப்பதாகவும் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கோரியும் இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மேற்கு மண்டல ஐ.ஜி யிடம் மனு அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், ”வருகின்ற 1ம் தேதி அனைத்து ஜமாத் அமைப்புகளும் இணைந்து போராட்டம் நடத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். கோவை நடைபெற்ற பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதாகவும் கூறினார்.

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை சிலர் முற்றுகையிட உள்ளதாகவும், மேலும் ஹிஜாப் விவகாரம் முடிந்தும் இவர்கள் அதற்கு போராட்டங்கள் நடத்தி கோவையில் மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சித்தார். இது குறித்து ஐ.ஜி யிடம் மனு அளித்துள்ளதாகவும் காவல்துறை இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் மீண்டும் ஒரு கலவரம் ஏற்படும் எனவும் கூறினார். மேலும் இந்துக்கள் மத்தியில் அவர்கள் குர்ஆன் அளிப்பதை இந்து முன்னனி வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
Be First to Comment