காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!

கோவையில் போலீஸ் செல்வராஜ், 19 இஸ்லாமியர்கள் இறந்த தினம் மற்றும் டிசம்பர் 6 போன்ற நிகழ்வுகளை முன்னிட்டு, மாநகரத்தின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் கடந்த 1997 ஆம் ஆண்டு, கோவை உக்கடம் பகுதியில் பணியில் இருந்த காவலர் செல்வராஜ் என்பவர், அல் உம்மா எதிரிகளால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, கோவையில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் 19 இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர். இதற்கு பழி வாங்கும் விதமாக,கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள கிளாசிக் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் உள்ள கார் பார்க்கிங் ஏரியாவில் வெடிகுண்டு வைத்து ஏராளமானோர் உயிரிழந்தனர்.

காவலர் செல்வராஜ்,இஸ்லாமியர்கள் இறந்த சம்பவங்கள் நடந்த இந்த நாளில் கோவை உக்கடம், டவுன் ஹால்,ரயில் நிலையம்,பிரபல கோவில்கள் முன்பு என மாநகர பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல பாபர் மசூதி இடிப்பு 13வது நினைவு தினமான டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டும், பதட்டமான பகுதியான கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *