தமிழ்நாடு காவல் துறையினரின் சார்பாக காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு இடையேயான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சென்னையில் ஜனவரி மாதம் 28 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் பிரகாஷ் என்பவர் 300 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் ஆனைமலை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ரிசாத் என்பவர் 25 மீட்டர் கார்பன் துப்பாக்கி சுடும் போட்டியில் மூன்றாவது பரிசாக வெண்கலப் பதக்கம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மேற்படி காவலர்கள் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு-யினை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர். மேலும் மாநில அளவில் மேற்கு மண்டல காவல் துறையினர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

Leave a Reply