சட்டமன்ற தேர்தலை அமைதியாக நடத்தவும், தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கோவையில் காவல்துறையினருடன் இணைந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் , தேர்தல் நடத்தை விதிமுறைகள அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கோவையில் இன்று மாலை கோவை மாநகர காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

கொடி அணிவகுப்பை மாநகர காவல் உதவி ஆணையர் செட்ரிக் இமானுவேல் துவக்கி வைத்து, அணிவகுப்பில் கலந்து கொண்டார். சுந்தராபுரம் முதல் போத்தனூர் ரயில் நிலையம் வரையும் பேன்டு வாத்தியங்கள் முழங்க மத்திய தொழில் பாதுகாப்பு படை , ஆயுதப்படை, கோவை மாநகர போலீசார் ஆகியோர் கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி இந்த அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

சட்டமன்றதேர்தலை அமைதியாக நடத்திடவும், பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் விதத்திலும் இந்த அணிவகுப்பானது நடத்தப்பட்டது.
இதன் மூலம் வாக்காளர்கள் அச்சமின்றி தைரியமாக வந்து வாக்குகளை பதிவு செய்ய முடியும் என்பதால் துப்பாக்கிகளுடன் கொடி அணிவகுப்பானது நடத்தப்படுகின்றது.
Be First to Comment