கோவை மாநகர காவல்துறையின் சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று சுந்தராபுரம் சரத் மஹாலில் நடைபெற்றது. இதில் கோவை தெற்கு உட்கோட்டத்திற்குட்பட்ட போத்தனூர், குனியமுத்தூர், செல்வபுரம், இராமநாதபுரம் ஆகிய நான்கு காவல்நிலையங்களின் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் வந்திருநது மக்கள் குறைகளை கேட்டறிந்தனர்.

பொதுமக்களிடையே அவர்களுடைய மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் சிலரது குறைகளை அதற்குண்டான காலக்கெடுக்குள் முடித்து தருவதாக கூறினர். இந்த நிகழ்ச்சியில் கோவை உதவி ஆணையர் செட்ரிக் இமானுவேல் தலைமையில் நடந்தது. சுமார் 150க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Be First to Comment