கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 D புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சுந்தராபுரம் பகுதியில் லிண்டாஸ் மகாலில் நடைபெற்றது.
ப்ளூம் 2021 எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், மாவட்ட ஆளுநர் குப்புசாமி தலைமை வகித்தார்.
இதில் 2021-22 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது கோவை காவேரி குழுமங்களின் துணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங். ரத்தோருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருது வாங்கிய வினோத் பேசுகையில், தமக்கு இந்த விருது வழங்கியது பெருமை அளிப்பதாக இருப்பதாகவும் குறிப்பாக அனைவரும் மனிதர்களை மதித்து சேவைகளில் ஈடுபடவேண்டும் என தெரிவித்த அவர் தாம் தொடர்ந்து செய்யும் சமுதாய சேவைகளுக்கு இந்த விருது ஊக்கமளித்து இருப்பதாக தெரிவித்தார்.
Be First to Comment