கோவை கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க-வை தோற்கடிக்க தி.மு.க முக்கிய பொறுப்பாளர்கள் செய்த சதி அம்பலம்
கோவை கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக குறிச்சி பிரபாகரனுக்கு போட்டியிட்டார்.
ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது நீண்ட இழுபறிக்கு பின்னர் 1095 சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் குறிச்சி பிரபாகரன் அ.தி.மு.க செ.தாமோதரனிடத்தில் தோல்வி அடைந்தார்.
இந்த தோல்விக்கு பின்னால் தி.மு.க பொறுப்பாளர் மற்றும் முக்கிய மாவட்ட பொறுப்புகளில் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் செய்த உள்குத்து சதிவேலையே குறிச்சி பிரபாகரன் வெற்றியை பறித்து உள்ளது என தி.மு.கவினர் கூறி வருகின்றனர். அது உண்மை என்பதை உணர்த்தும் விதமாக தற்போது வலைதளங்களில் உலாவரும் வீடியோக்களை காண்பிக்கின்றனர்.
அந்த வீடியோவில் முக்கிய பொறுப்பாளரின் வலதுகரமானவரும், தீவிர ஆதரவாளருமானவர் பேசுகையில்…
“குறிச்சி பிரபாகரன் தோல்வியடைய வேண்டும் என்று சொல்லி அதற்கான ரகசிய ஆலோசனைகளை அவர்களின் ஆதரவாளர்களுக்கு வழங்குகிறார். அந்த வீடியோவில் அண்ணனை விட்டுக் கொடுக்கக் கூடாது. தி.மு.க-வில் சீட்டு வாங்கிய குறிச்சி பிரபாகரன் வெற்றி பெறக்கூடாது, தோற்க வேண்டும் என்றும், பிரபாகரன் வந்தால் நம்மளை எல்லாம் முடித்து விடுவான். அதனால நம்ம போடுற பிளான் யாருக்கும் தெரியக்கூடாது, கட்சியின் மூலம் வரும் பணம் யாருக்கும் போய்ச் சேரக்கூடாது, கட்சியில் கொடுத்த பணத்தை அபேஸ் செய்து சிறிய தொகையை 7 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் மட்டும் மஞ்சள் பையில் வைத்து பறக்கும் படையிடம் வீசி விட்டு மீதி பணத்தை அபேஸ் செய்து கொண்டு பறக்கும் படை பிடித்து விட்டார்கள் என்ற பொய்யான தகவலை சொல்ல வேண்டும் என்றும் சொல்கிறார்.
மேலும் அவர்கள் கட்சியில் கொடுக்கும் பணம் நமது கையில்தான் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும், அப்படி கொடுக்கும் பணத்தை யாரிடமும் சேராமல் தடுத்து அதன்மூலம் பிரபாகரனின் வெற்றியை தடுத்திட வேண்டும் என்று திட்டமிட்டு ஆலோசனை வழங்குகிறார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவருக்கு முக்கிய பொறுப்பாளரிடமிருந்துபோனில் அழைப்பு வருகிறது. அண்ணன்தான் பேசுகிறார் என்று அவருடன் உரையாடிவிட்டு மீண்டும் வருகிறார். அண்ணன் தான் பேசுறார் என்றும் ஒன்றிய பொறுப்பாளரை மாத்தியே தீரவேண்டும், நீ சும்மா நோட்டீஸ் கொடுக்கிற மாதிரி போட்டோ எடுத்து போடு, உன்ன அந்த இடத்துக்கு கொண்டு வர்ற வேலைய நான் பாத்துக்குறேன்னு அண்ணன் சொல்லிட்டார். என்று சொல்கிறார்.
மேலும் பிரபாகரன் தோற்கனும், அண்ணன்தான் மேயராக போறாரு, அப்புறம் இவனுக எல்லாத்தையும் ஒரு கை பாத்துக்கலாம் என்றும் வீடியோவில் சொல்கிறார்.
தற்போது வாட்ஸ்அப் குரூப்புகளில் வேகமாக பரவிவரும் இந்த வீடியோ குறித்து தி.மு.க-வினர் அதிர்ச்சியில் உள்ளனர். கோவை தி.மு.கவின் நிலை இதுதான்.
Be First to Comment