கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்ற 19வது பட்டமளிப்பு விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் தலைவரும், நிர்வாக அறங்காவலருமான எஸ்.மலர்விழி தலைமையில் முதன்மை செயல் அலுவலர் முனைவர் கே.சுந்தரராமன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ.ஜேனட் அனைவரையும் வரவேற்று கல்லூரியின் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக சாலிதான் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் மேகலா தேவராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, 1080 முதுநிலை மற்றும் இளநிலை பட்டயபடிப்பு சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து கல்வியில் மிகச் சிறந்து விளங்கி உயர் மதிப்பெண்கள் பெற்ற 29 மாணவர்களை வாழ்த்தி கௌரவித்தார்.
ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் .
Be First to Comment