கோவை தடாகம் சாலை கோவில்மேடு பகுதி மஞ்சேஸ்வரி காலனியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஆனந்தகுமார் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். குடிபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மற்றும் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மகன் மற்றும் மகள் வேலைக்கு சென்றிருந்த நிலையில் ஆனந்தகுமார் குடிபோதையில் வேறொரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து அவரது மனைவி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த ஆனந்தகுமார் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கத்தியை கொண்டு மனைவியை சராமரியாக தாக்கியுள்ளார்.
அப்போது அவரது மனைவி சத்தமிடவே சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் துடியலூர் போலீசாருக்கு தகவல் அளித்து விட்டு இவர்களது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்து ஆனந்தகுமார் தப்பி ஓட அவரை துரத்தி சென்ற போது தக்க சமயத்தில் அங்கு வந்த போலீசாரிடம் பிடிப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு சென்று பார்க்கும் போது செல்வி இரத்த வெள்ளத்தில் கழுத்தறுப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ஆனந்தகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடிபோதையில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி செல்ல முயன்ற கணவன் கைது
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment