Press "Enter" to skip to content

குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு

 கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 26ம் தேதி காலை 8 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இந்நிலையில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:* கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* மூத்த குடிமக்கள், பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் குடியரசு தின விழாவை காண வருவதை தவிர்க்க வேண்டும்.
* குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More from தமிழகம்More posts in தமிழகம் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks