குனியமுத்தூரில் இருந்து நண்பர் ராஜ்குமாருடன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த முகமதுராபிக் இடையர்பாளையம் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் அருகில் வரும் பொழுது தனது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதியதில் சாலையின் நடுவே விழுந்துள்ளார்.
பின்னால் காந்திபுரத்தில் இருந்து மதுக்கரை நோக்கி வந்த தனியார் பேருந்தின் சக்கரத்தில் முகமதுராபிக் சிக்கியதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த நண்பர் ராஜ்குமார் சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார்.
விபத்தில் உயிரிழந்த நண்பனின் உடல் அருகில் இருந்து ராஜ்குமார் கதறி அழும் காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. முதற்கட்ட விசாரனையில் இருவரும் கோவை சுகுணாபுரம் மயில்கல் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் காவல் நிலைய போலீசார் விபத்தில் சிக்கி காயமடைந்த ராஜ்குமாரையும், விபத்தில் உயிரிழந்த முகமதுராபிக் இருவரையும் ஆம்புலன்ஸ்மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலைவிபத்தில் சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Be First to Comment