தேர்தல் நேரத்தில் கட்சிகள் மாறுவது இயல்பான ஒன்று. ஆனால் கட்சியில் சேராத நபர்களை தங்கள் கட்சியில் சேர்த்ததை போல புகைப்படம் எடுத்து பதிவிட்டு பரபரப்பை செய்வது தற்போது குறிச்சியில் டிரெண்டாகி வருகிறது.

குறிச்சி 98வது வார்டில் அ.ம.மு.க கட்சியில் இருப்பவர் சுதா என்ற பெண்மணி. இவர் ஏற்கனவே தி.மு.கவில் இருந்து அ.ம.மு.கவிற்கு இணைந்து விட்டார். இந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன் தி.மு.கவின் 98வது வட்ட செயலாளர் தினகரன் மற்றும் இமயநாதன் இருவரும் சுதா மீண்டும் தி.மு.கவில் இணைந்ததாக ஒரு படத்தினை சமூக தளங்களில் பதிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுதா இன்று (10.2.2020) அ.ம.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் ரோகிணி (எ) கிருஷ்ணகுமரை சந்தித்து தான் அ.ம.மு.கவில்தான் இருக்கிறேன் என்பதனை உறுதி செய்தார்.

அ.ம.மு.கவின் 98வது வட்ட செயலாளர் வினோத்குமாருடன் சென்று ரோகிணியை சந்தித்து சால்வை அணிவித்த புகைப்படமும் தற்போது சமூக தளங்களில் அ.ம.மு.கவினர் பதிவிட்டுள்ளனர்.
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று இன்னும் எத்தனை காட்சிகளை சட்டமன்ற தேர்தல் வரும் வரை பார்க்க போகின்றோமோ.
Be First to Comment