1972-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர்., அதே ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாளில் (17-ந் தேதி) அ.தி.மு.க.வை தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றோடு 49 ஆண்டுகள் நிறைவடைந்து, 50-வது ஆண்டு பொன்விழா தொடங்குகிறது.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியின் பொன்விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே கோவை குறிச்சி போத்தனூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.கவினர் கொடிகள் ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நிகழ்ச்சிகள் நடத்தினர். போத்தனூர் சித்தணபுரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க போத்தனூர் பகுதி செயலாளர் ரபீக் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் குறிச்சி மணிமாறன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மதுக்கரை பேரூராட்சி செயலாளர் சண்முகராஜா, சிறுபான்மை நல பிரிவு செயலாளர் சுரா. வட்ட செயலாளர் பாலு, வர்த்தக அணி சரவணம் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் அங்கிருந்த மக்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சி தொடங்கும் முன் அ.தி.மு.கவின் பாடகர் குத்துப் எம்.ஜி.ஆர் பாடல்களையும், முன்னாள் அமைச்சர் வேலுமணியை புகழ்ந்து பாடியதையும் அங்கிருந்தவர்கள் வெகுவாக ரசித்தனர்.
Be First to Comment