இந்தியில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளிவந்த படம் ”ஆர்டிகள் 15”. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. ஜீ ஸ்டூடியோஸும் போனி கபூரின் பே வியூ பிராஜக்ட்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.
ஒரு மனிதனுக்கான எந்தவித அடிப்படை உரிமைகளும் சாதி, மதம், இனம், பால், பிறந்த இடம் இவற்றின் அடிப்படையில் மறுக்கப்படக் கூடாது என்பதுதான் ஆர்ட்டிகள் 15. அண்ணல் அம்பேத்கரால் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவத்தை சட்டப்பூர்வமாக நிலைநாட்டும் முக்கியமான ஒரு அரசியலமைப்புப் பிரிவு இந்த ஆர்ட்டிகள் 15 கதைக்களம்.
உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. இன்று குறிச்சி சுந்தராபுரத்தில் அமைந்துள்ள காலி இடத்தில் (பழைய லோட்டஸ் மில்) முக்கிய காட்சிகளை படம்பிடித்து வருகின்றனர்.

குறிச்சியில் உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பு
More from சினிமாMore posts in சினிமா »
Be First to Comment