திராவிட இயக்கத்தின் வழித் தோன்றல் பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, தி.மு.கழகத்தை தோற்றுவித்த அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15, தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து “முப்பெரும் விழா”வாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் தி.மு.க முப்பெரும் விழா இன்று காணொளி மூலமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முப்பெரும் விழா விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவிற்கு தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையேற்றிட தி.மு.க முன்னணியினர் வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் ஆசிரியர் ‘முரசொலி’ செல்வம் எழுதிய “முரசொலி சில நினைவலைகள்” என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு சிறப்பித்தார். விருதுகள் பெறுவோர் “முப்பெரும் விழா”வில் முத்தாய்ப்பு விருதுகள் வழங்குவது தான். அதன்படி, தி.மு.க தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின்; பெரியார் விருதை – மிசா பி.மதிவாணனுக்கும், அண்ணா விருதை – தேனி எல்.மூக்கையாவிற்கும், கலைஞர் விருதை – கும்முடிப்பூண்டி கி.வேணுவிற்கும், பாவேந்தர் விருதை – வாசுகி ரமணனுக்கும், பேராசிரியர் விருதை – பா.மு.முபாரக்கும் வழங்கினார்.
மேலும் இவ்விழாவில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.இராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியை போத்தனூர் பி.வி.ஜி மஹாலில் குறிச்சி பகுதி சார்பில் காணொளியில் தி.மு.கவினர் பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, குறிச்சி வடக்கு பகுதி பொறுப்பாளர் எஸ்.ஏ.காதர் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.
வீடியோ கீழே 👇👇👇
Be First to Comment