கிணத்துக்கடவு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உமா ஜெகதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று குறிச்சியில் பரப்புரையில் ஈடுபட்டனர். சாரதா மில் ரோட்டில் சாலையில் செல்லும் பொதுமக்களிடையே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதன் அவசியத்தை கூறி வாக்கு சேகரித்தனர்.

பலரும் ஏதோ விளம்பரம் என்றே நினைத்து துண்டிறிக்கையினை பெற்றனர். அதிக அளவிலான ஆட்கள் இல்லாமல் விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்பதையும், எந்தவித ஆடம்பரமின்றி இருவர் மட்டுமே வாக்கு சேகரிப்பதை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் அவர்களை கடந்தனர்.
Be First to Comment