குறிச்சியில் வீடுகளை காலி செய்ய சொல்லி மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறிச்சி,சில்வர் ஜூப்ளியில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியிரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில், குறிச்சி சில்வர் ஜூப்ளி வீதி பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமுதாயம் மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவில் குறிச்சி பகுதியில் சில்வர் ஜூப்ளி வீதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்த போது கட்டி கொடுத்த அரசு தொகுப்பு ஒதுக்கீட்டில் கட்டிய வீடுகளை தற்போது தனி நபர் ஒருவர் இந்த பகுதியில் குடியிருக்கும் நிலங்கள் எங்களுடையது எனவும், விரைவாக வீடுகளை இடிக்க வேண்டும் இல்லையென்றால் நாங்கள் பொக்லின் வண்டியை விட்டு வீட்டை இடித்து யாரும் புழங்காத அளவுக்கு மதில் சுவர் கட்டி விடுவோம் என்று கூறி தொடர்ச்சியாக மிரட்டுவதாகவும்,மேலும் எந்த தகவலும் இல்லாமல் குடியிருக்கும் பகுதிக்கு வந்து இடையூறு செய்வதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும்,நாங்கள் வசிக்கும் இடத்திற்கு உரிமை கோருபவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அங்கு வசித்து குடும்பங்களுக்கும்,இடத்திற்கு எந்த பாதிப்பில்லாமல் நாங்கள் வாழ்வதற்கு அதே இடத்தில் உதவி செய்து கொடுத்தும் எங்களுக்கு எந்த இன்னல்களும் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பு கொடுக்க கோரியும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மனு வழங்க ஆட்சியர் அலுவலகம் வந்த,பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆதரவாக குறிச்சி அனைத்து சமூக த்தினர் உடனிருந்தனர்.
Be First to Comment