கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 97வது வார்டில் காமராஜ் நகர் கே.வி.கே நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை கோவை மாநகராட்சி சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமினை தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தி.மு.க தெற்கு பகுதி செயலாளர் மற்றும் 100வது வார்டு மாமன்ற உறுப்பினர் இரா.கார்த்திகேயன், 95வது வார்டு மாமன்ற உறுப்பினரும், வடக்குப் பகுதி செயலாளர் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க 97வது வட்ட பொறுப்பாளர் கா.மாகலிங்கம், மாநகராட்சி துணை ஆணையாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவில் ஏராளமான பொதுமக்களும், தி.மு.கவிர் கலந்து கொண்டனர்.

Be First to Comment