குறிச்சி லோகநாதபுரம் முதலியார் வீதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி என்ற ஆறுமுகம்.

சமூக ஆர்வலரான இவர் குறிச்சி குளக்கரையை சுற்றி, தனது சொந்த செலவில் கடந்த மூன்று நாட்களாக 50 பனைமரம் விதைகளை நட்டு உள்ளார். இவருக்கு உதவியாக இவரது குடும்பத்தினரும் இந்த குறிச்சி குளத்தில் இறங்கி பணி செய்துள்ளனர். இவர் இதற்கு முன்பு குறிச்சி குளத்தில் ஆகாயத்தாமரையை தன் சொந்த செலவில் அகற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply