ஒய்யார கொண்டையில் தாழம்பூவாம், உள்ளே இருப்பது ஈரும் பேணுமாம் எனற சொலவடைக்கேற்ப இருக்கிறது குறிச்சி குளம். குறிச்சி குளம் ஊரின் முகப்பில் பார்க்கும் போது தண்ணீர் தேங்கி நிற்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் பின்பகுதியில் இருப்பதோ சேறும் சகதியும், குடிமகன்கள் உடைத்த கண்ணாடி சில்லுகளும்தான். கரையின் மேற்பகுதி முழுவதும் செடிகளும், சேரும் காணப்படுவதால் குளத்தில் நீர் இருப்பது தெரியாது.
மேலும் குளக்கரையில் அதிக அளவில் புற்கள் இருக்கும் காரணத்தினால், அப்பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் மேய்ச்சலுக்காக இந்த குளக்கரையில் தங்களது கால்நடைகளை விட்டுச் செல்வது வழக்கம். இன்று இந்தப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த சுமார் ஒரு ஏழு வயது உடைய பசு ஒன்று குளத்தில் படர்ந்திருந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்தபோது தவறி குளத்தின் சகதியில் விழுந்து விட்டது. சுமார் ஒரு மணி நேரமாக குளத்தின் சகதியில் கிடந்தது பசு.
இதனை பார்த்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயலபட்டு பசுவினை கரை சேர்ந்தனர். குளத்தில் தவறி விழுந்த பசுவை மீட்க தீயணைப்பு துறையினர் மீட்க நடத்திய போராட்டம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
சகதியில் சிக்கிய பசு மாட்டினை மீட்டு கரை சேர்ந்த தீயணைப்பு துறையினருக்கு மக்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் அதன் உரிமையாளர்கள் மாட்டின் அருகில் இல்லாமல் விட்டு செல்வதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் இந்த பகுதியில் அடிக்கடி நடக்கிறது. நல்லவேளையாக பகலில் நடந்ததால் மாடு காக்கப்பட்டது. இரவு நேரமாக இருந்து இருந்தால் மாடு விழுந்ததே யாருக்கு தெரியாமல் போய் இருக்கும் என்கின்றனர் அப்பகுதிவாசிகள்.

குறிச்சி குளத்தில் தவறி விழுந்த பசு கரை சேர்ந்ததும் மக்கள் நெகிழ்ச்சி
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment