குறிச்சி தி.மு.க சார்பில் மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்படும் ஏழைகளுக்கும், பொதுமக்களுக்கும் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டும் குறிச்சி பகுதி தி.மு.க சார்பில் போத்தனூர் நூராபாத் பகுதியில் 150க்கும் மேற்பட்டோருக்கு அரிசி வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு துணை அமைப்பாளர் சானவாஸ் ஏற்பாட்டில், தெற்கு பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர் நிசார் அகமது தலைமையில், கோவை மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் அரிசியினை மக்களுக்கு வழங்கினார். இதில் குறிச்சி பகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், டிவிசன் பொறுப்பாளர் முரளிதரன், ரமணி மற்றும் தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

வீடியோ 👇


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *