தி.மு.க. அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை நடத்துவதற்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பேரூர் கழகம், நகர கழக மற்றும் வட்ட கழக செயலாளர்களுக்கான தேர்தலுக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன.
கோவையில் உள்ள 100 வார்டுகளுக்கு 200க்கும் வட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கருத்து நிலவிய நிலையில் குறிச்சியில் தற்போது உள்ள 25 வட்ட பொறுப்பாளர்களில் பெரும்பாலானோர் மீண்டும் வட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் சிலர் மாற்றப்பட்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று பரவலாக பேசப்பட்டது. அடிப்படை தொண்டர்கள் முதல் மேம்பட்ட நிர்வாகிகள் வரை இந்த பதவிகளுக்கு கடுமையாக மோதி வருகின்றனர். ஒவ்வொரு பதவிக்கும் 3, 5, 10 பேர் வீதம் போட்டி போட்டு பணம் கட்டினார்கள். இதற்கிடையில் வட்ட செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட அதிகம் பேர் கேட்ட நிலையில் நிர்வாகிகள் அவர்களை அழைத்து பேசி மாற்று வாய்ப்பு தருவதாக கூறி பல வட்டத்தில் செயலாளர்கள் இறுதி செய்யப்பட்டதாம்.
இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன் வந்த அறிவிப்பால் தற்போது சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. ”தி.மு.க 15வது பொதுத் தேர்தலில் 21 மாநகராட்சிகளில் உள்ள வட்டக் கழக தேர்தல்கள் அரசினால் அறிவிக்கப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது.” என தி.மு.க தலைமை கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு 100 செயலாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதனால் வார்டில் மூன்றுக்கும் மேற்பட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலை மாறியுள்ளது. இதற்கு பலர் மகிழ்ச்சியடைந்தனர். சிலர் சங்கடத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது உள்ள பகுதி செயலாளர்கள் பொறுப்புகளும் குறைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவையில் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த பகுதிகள் பிரிக்கப்பட்டு இரண்டு பகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். குறிப்பாக ஒருங்கிணைந்த குறிச்சி பகுதி செயலாளராக குறிச்சி பிரபாகரன் இருந்தார். அதன் பின்னர் குறிச்சி பகுதி பொறுப்பாளராக உதயகுமார் நியமிக்கப்பட்டார். சிறிது காலத்திற்கு பிறகு குறிச்சி பகுதி செயலாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
அடுத்ததாக ஒருங்கிணைந்த குறிச்சி பகுதியினை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து குறிச்சி தெற்கு மற்றும் குறிச்சி வடக்கு என தி.மு.க பிரித்தது. அதில் வடக்கு பகுதி பொறுப்பாளராக காதரும், தெற்கு பகுதி பொறுப்பாளராக கார்த்திகேயனும் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு குறிச்சியின் ஒட்டுமொத்த 8 வார்டுகளுக்கு 25 வட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் நீண்ட நாட்களுக்கு பிறகு பலருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
தற்போது வார்டிற்கு ஒரு செயலாளர் என்ற அடிப்படையில் மாற்றம் மீண்டும் வரும் சூழ்நிலையில், பகுதி செயலாளரும் ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்ற கேள்வி தொண்டர்களிடம் எழுந்துள்ளது. இது தி.மு.க தொண்டர்களிடையே பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் குறிச்சி ஒருங்கிணைந்த பகுதியாக மாறுமா? அல்லது இப்போது உள்ளது போன்றே இரண்டு பகுதி பொறுப்பாளர்கள் தொடர்வார்களா?

குறிச்சி தி.மு.க வட்ட செயலாளர் போட்டி?
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment